அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி.. 37 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்..!

37 students studying in Panchayat Union Primary School in Bhattarai village near Vembakkam, Tiruvannamalai district had nutritious lunch this afternoon. Then, it seems that there was a lizard in the food of class 4 student Gopika. On seeing this, 13 students vomited on the spot, followed by fainting. Immediately, all the students who had the nutritious meal were taken to Ariyur Government Primary Health Center and given first aid treatment. Later, all the 37 students who had the nutritious meal were admitted by ambulance to the Seyyar Government District Head Hospital for treatment. Among them, 11 students have been admitted to the inpatient unit and are receiving treatment. Other students were treated and sent home safely.

The students who are undergoing treatment at the Seyyar Government Hospital were met by the Seyyar Revenue Commissioner R. Annammal, District Collectors (Vembakkam) Subash Chander, (Seyyar) Mahendramani, Vembakkam District Development Officers Paranirajan and Gopalakrishnan and expressed their condolences.

After getting the information, the police rushed to the spot and are investigating. Also, samples of the food eaten by the students have been sent for testing.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே பட்டரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் 37 மாணவ, மாணவிகள் இன்று மதியம் சத்துணவு சாப்பிட்டனர். அப்போது, 4-ம் வகுப்பு மாணவி கோபிகாவின் சாப்பாட்டில் பல்லி இருந்ததாகத் தெரிகிறது.

இதனைக் கண்ட 13 மாணவர்களுக்கு அங்கேயே வாந்தியும், அதனைத் தொடர்ந்து மயக்கமும் ஏற்பட்டது. உடனடியாக, சத்துணவு சாப்பிட்ட அனைத்து மாணவ, மாணவிகளும் அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் 37 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 11 மாணவ, மாணவிகள் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் ஆர்.அன்னம்மாள், வட்டாட்சியர்கள் (வெம்பாக்கம்) சுபாஷ் சந்தர், (செய்யாறு) மகேந்திரமணி, வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணிராஜன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
Post a Comment (0)
Previous Post Next Post