ஆன்லைன் தேர்வே வேண்டும்! போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள்

மேற்கு வங்கத்தில் இணையவழியில் பருவத் தேர்வுகளை நடத்த வலியுறுத்தி பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோடை வெயில் அதிகம் வாட்டி வதைப்பதாலும், அதிக வெப்பத்தின் காரணமாக பயணம் செய்து பல்கலைக் கழகத்திற்கு வர இயலாது என்பதாலும், இணையவழியில் தேர்வு நடத்த மாணவர்கள் கோரிகை வைத்துள்ளனர்.

அலியா பல்கலைக் கழகத்தில் பருவத் தேர்வுகளை வகுப்பறைகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக் கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பேசிய மாணவர்கள், இணையவழியில் பருவத் தேர்வினை நடத்த வேண்டும். கோடை வெயில் மற்றும் அதிக அளவு வெப்பநிலை காரணமாக ஆஃப்லைன் தேர்வுக்கு பலரால் வர இயலாது. இதனால் இணைய வழியில் தேர்வை நடத்த வேண்டும். இல்லையெனில் மாணவர்கள் தேர்வை புறக்கணிப்போம் என்று தெரிவித்தனர்.
Post a Comment (0)
Previous Post Next Post