தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பள்ளி மாணவர் வகுப்பறையில் வைத்து பூட்டப்பட்டதையடுத்து அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பள்ளியைச் சேர்ந்த 5 ஆசிரியர்கள் மீதும் கல்வித் துறை அதிகாரிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

ஆதித்யா (5 வயது) மாணவன் நேற்று முன்தினம் (ஜூலை 7) பள்ளி வகுப்பறையிலேயே வைத்து பூட்டப்பட்டுள்ளார். பின்னர், அந்த மாணவர் அவரின் பெற்றோரின் உதவியால் வகுப்பறை கதவை உடைத்து மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விடியோ இணையத்தில் வைரலானதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஊர்மிளா தேவி தனது கடமையை சரிவர செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்டதாகக் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தினால் அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அஃப்ராஸ் அரா, பிரியங்கா யாதவ்,சாந்தி, மீரா தேவி, மற்றும் சுரேந்திர நாத் ஆகிய 5 பேரின் ஊதிய உயர்வும் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் ஆதித்யா வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருந்ததை கவனிக்காமல் வகுப்பறையை பூட்டிச் சென்றுவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது
Post a Comment (0)
Previous Post Next Post