மாணவர்களுக்கு இலவச சைக்கிள்... "முதல்வரின் புகைபடம் இல்லை..அதற்கு பதிலாக.."



தமிழ்நாட்டில் அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் இத்திட்டத்தைத் துவக்கி வைத்த நிலையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் உள்ள பிற பள்ளிகளிலும், ஏற்கனவே தயார் நிலையில் உள்ள மிதிவண்டிகள், மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 12ம் வகுப்பு பயிலும் ஆறரை லட்சம் மாணவர்களுக்கு, 323 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மிதிவண்டிகள் ஒப்பந்தம் கோரப்பட்டு வரவழைக்கபட்டுள்ளன.

இதையும் படிக்க | Important instructions regarding Corrections for CUET (PG) 2022 இந்த ஆண்டு அடர் நீல வண்ணத்தில் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. அதேபோல், சைக்கிள்களில் முதல்வர் படத்திற்கு பதிலாக தமிழக அரசின் சின்னம் மற்றும் அதனுடன் மிதிவண்டி இயக்குவதால் ஏற்படும் பயன்கள் குறித்தான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதனிடையே அடுத்த ஒரு மாத காலத்துக்குள் 11ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Post a Comment (0)
Previous Post Next Post