உயர்கல்வியில் திமுக அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Chief Minister MK Stalin participated in the inauguration of the Sai University building at Payyanur next to Chennai. Minister of Higher Education Ponmudi was the guest of honor at the function. Chief Minister MK Stalin addressing the opening ceremony; The DMK government is paying close attention to higher education. The entrance examination was canceled under the artist regime on that day due to its focus on higher education. The artist who canceled the entrance exam and got Supreme Court approval for it.

Kamaraj for school education means artist for higher education. I have mentioned that the current DMK regime will be a golden age for higher education. Poonthukkolam is committed to creating a position where the most talented students in the world are available only in Tamil Nadu. The number of people getting higher education in Tamil Nadu is higher than the national percentage. There are 13 universities under the control of the Department of Higher Education. He said that the first project was created to develop the youth of Tamil Nadu as achievement students.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை அடுத்த பையனூரில் சாய் பல்கலைக்கழக கட்டிட திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் கவுரவ விருந்தினராக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றுள்ளார். திறப்பு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; உயர்கல்வியில் திமுக அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது. உயர்க்கல்வியில் கவனம் செலுத்துவதன் காரணமாகத்தான் அன்று கலைஞர் ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வை ரத்து செய்ததுடன் அதற்கு உச்சநீதிமன்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் கலைஞர்.

பள்ளிக்கல்விக்கு காமராஜர் என்றால் உயர்க்கல்விக்கு கலைஞர். உயர்க்கல்விக்கு தற்போதையை திமுக ஆட்சி பொற்காலமாக இருக்கும் என்று நான் குறிப்பிட்டுள்ளேன். உலகிலேயே திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டில் தான் கிடைக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்க உறுதி பூண்டுக்கோலம். தேசிய விழுக்காட்டை விட தமிழ்நாட்டில் உயர்க்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகம். உயர்க்கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. சாதனை மாணவர்களாக தமிழக இளைஞர்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் நான் முதல்வன் திட்டம் எனவும் கூறினார்.
Post a Comment (0)
Previous Post Next Post