சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் தாமதம் ஆகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே உயர்கல்வி மாணவர் சேர்க்கையை நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் முடிக்க வேண்டாம் என யூஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் தாமதம் ஆகும் என்கிற தகவலைத் தெரிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்புக்கான 2-ஆம் பருவத் தேர்வு, ஏப்ரல் 26-ஆம் தேதி தொடங்கி ஜூன் 15வரையும், சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 26-ஆம் தேதி தொடங்கி மே24-ஆம் தேதி வரையும் நடைபெற்றது. இந்நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகக் காலம் தாமதம் ஆகுவதால் தற்போது உயர்கல்வியில் சேர முடியாத ஒரு நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.