CUET - UG தேர்வு முதற்கட்டமாக ஜூலை 15ம் தேதியிலும், 2ம் கட்டமாக ஆகஸ்ட் 4ம் தேதியிலும் தொடக்கம்;
முதற்கட்டத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படும், 2ம் கட்டத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும்
- யுஜிசி
CUET-UG க்கான நுழைவு தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என யுஜிசி தெரிவித்துள்ளது.
வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) இந்தியாவில் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர CUET – UG நுழைவுத் தேர்வை UGC அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது தேர்வு நடக்கும் தேதியை யுஜிசி அறிவித்துள்ளது. இதையடுத்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், CUET – UG தேர்வு இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும். ஜூலை 15-ம் தேதி முதற்கட்ட தேர்வு தொடங்குகிறது. இரண்டாம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 4-ல் தொடங்குகிறது. ஜூலை 15-ம் தேதி தொடங்கும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 4-ல் தொடங்கும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் 31-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CUET – UG தேர்வுக்காக மொத்தம் 14.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்டமாக ஜூலை 15-ல் தொடங்கும் தேர்வை 8.10 லட்சம் பேரும், ஆகஸ்ட் 4-ல் தொடங்கும் தேர்வை 6.80 லட்சம் பேரும் எழுதுகின்றனர். CBT முறையில் (ஆன்லைன் முறையில்) தேர்வு நடத்தப்படுவதால் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.