மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அரசு தகவல்

மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அரசு தகவல்

மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய அரசு மக்களவையில் மாநில பணியாளர் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசில் நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்கள் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் மத்திய அரசில் மொத்தம் 9.79 லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மார்ச்1, 2021 நாள் வரையிலான செலவினத் துறையின் ஊதிய ஆய்வு அறிக்கையின்படி 9,79,327 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்று இணை அமைச்சர் எழுத்துப் பூர்வமாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளார். மேலும் இப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசு சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவுரைகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரின் வேறு ஒரு பதிலில் இந்திய சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கான தகவலும் இடம்பெற்றிருந்தது.

இந்திய நிர்வாக சேவைப் பணிகளில் மட்டும் 1,472 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் பணியிடங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment (0)
Previous Post Next Post