பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பிற்கான விண்ணப்பங்கள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் 2005-ம் ஆண்டு முதல் தரம் வாய்ந்த பல்வேறு சான்றிதழ், முதுநிலைப் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளை உயர்தொழில் நுட்பத்துடன், செயல்முறை விளக்கங்களுடன் பல்கலைக்கழகத்தின் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன். சுய தொழில் வாய்ப்பு பெறும் வகையில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பினை (Diploma in Agri Inputs) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்கத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. இது உலக அளவிலேயே முதல் முறையாக இடுபொருள் விற்பனையாளர்களுக்கென்று வழங்கப்படும் ஒரு முன்னோடித் திட்டமாகும். வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த உபதொழில்களில் ஈடுபட்டுள்ள உழவர் பெருமக்கள் மற்றும் சுயதொழில் தொடங்க முயல்பவர்கள் தாங்கள் சுயதொழில் தொடங்கும் வகையிலும் மற்றும் அனைத்து நவீன வேளாண் தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்ளும்படி இப்புதிய தொழில்நுட்பப் பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது.

ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்துார் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் கல்லுாரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மற்றும் தோட்டக்கலை மையம், சென்னை ஆகிய இடங்களில் நேரடி பயிற்சிகள் மூலம் நடத்தப்படவுள்ளது. இந்த 2021-22 ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வழங்கப்படுகிது. விண்ணப்ப கட்டணம் ரூ.100. இப்பட்டயப்படிப்பில் சேருவதற்கான தகுதியானது 18 வயது நிரம்பிய 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். இது ஒரு வருட படிப்பாகும் இரண்டு பருவங்களை கொண்டது, பயிற்சி கட்டணம் ரூ.25000 ஆகும். ஏனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த சுயதொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளவர்கள் இம்மாத நவம்பர் 15. ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு

திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம்

பாப்பாரப்பட்டி - 636 809 தருமபுரி மாவட்டம்

தொலைபேசி 04342 245860

இத்தகவலை முனைவர் ம.விஜயகுமார். இணை பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் முனைவர் மா.அ.வெண்ணிலா உதவி பேராசிரியர் மற்றும் பாட ஒருங்கிணைப்பாளர் (ODL ) வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி ஆகியோர் தெரிவித்தனர்.
Post a Comment (0)
Previous Post Next Post