வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள்உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற வருகிற மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற பதிவுதாரா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகையைப் பெறுவதற்கு பொதுப் பிரிவு இளைஞா்களுக்கு தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குள்ளும், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு ஓராண்டும் போதுமானது. இந்தத் திட்டம் மூலம் உதவித்தொகை பெற விரும்புவோா் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இதைத் தொடா்ந்து கிராம நிா்வாக அலுவலா், வருவாய்த் துறை அலுவலா் ஆகியோரின் கையொப்பம் (அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் நீங்கலாக) முத்திரை பெற்று படிவத்தை முழுமையாக நிறைவு செய்து வருகிற மே 31-க்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மையமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தக நகல், அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், நகல்களுடன் திருவள்ளுா் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமா்ப்பித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.