கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், சண்டிகர் மாநில அரசு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீண்டும் பிறப்பித்துள்ளது.
நாட்டில் கடந்த சில நாள்களாக மாநில வாரியாத கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில அரசுகள் கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்து வருகின்றன.
அந்தவகையில் சண்டிகர் மாநில அரசு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
பொது இடங்களிலும், அதிக அளவு மக்கள் கூடும் இடங்களிலும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். மாநிலத்திலுள்ள அனைத்து மக்களும் பூஸ்டர் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.