பள்ளிக்கு வராத மாணவர்கள் வீடுகளில் கணக்கெடுக்க உத்தரவு

பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து, வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில், பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களில், பள்ளிக்கு வராதவர்கள் குறித்து கணக்கெடுக்குமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வட்டார வள அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும்.

அவர்களை தொடர்ந்து பள்ளிக்கு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பருவ காலத்துக்கு ஏற்ப இடம் மாறும் நாடோடி குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களை பள்ளிக்கு வர ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post