ஒரு மாணவி ஆசிரியராகிறார்...!

ஒரு மாணவி ஆசிரியராகிறார்...

நாவல் எழுதி சேதி சொல்கிறார்!

கோவை ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பள்ளியில், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி முத்து அஷ்விதா ரமேஷ், இப்போது ஒரு புத்தகத்தின் ஆசிரியராக மாறியுள்ளார்.

இவர் எழுதியுள்ள 'பெண் மனதில் குரல்' என்னும் நாவல், படிப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. மாணவியிடம் பேசினோம்...படிக்கும் போதே ஒரு நூலின் ஆசிரியராக மாறி விட்டீர்களே...எப்படி சாத்தியமானது?'' படிப்புக்காக கட்டுரை எழுத துவங்கினேன். அதுவே கதையாக மாற துவங்கி, இன்று நாவலாக மற்றவர் கரங்களில்தவழ்கிறது. உங்கள் குடும்பத்தை பற்றி?உடன் பிறந்த தம்பி ஒருவர் இருக்கிறார். தந்தைக்கு இதய நோய். தாயார் தையல் வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இதற்கான கரு எங்கிருந்து கிடைத்தது? குடும்ப உறவில் மாமியார்- -- -மருமகள் உறவுகளை அக்கம், பக்கம் வீடுகளில் அதிகம் பார்த்துள்ளேன். நடுத்தர குடும்பத்தில் பிறந்த நான், கதையில் என்னையும் ஒரு கதாபாத்திரமாக (சுவாதி) வடிவமைத்து எழுதியுள்ளேன்.உங்கள் புத்தகம் உருவான விதம் குறித்து?ஆசிரியர்கள் கட்டுரை போட்டி நடத்தும்போது, அதிக பக்கங்கள் எழுத துவங்கினேன்.

சக தோழிகள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் தந்த ஊக்கத்தால் ஒரு கதை கருவை கையில் எடுத்துக்கொண்டு அதை ஒரு 60 பக்கம் கொண்ட நாவலாக எழுதி விட்டேன். இது என்னையே ஆச்சரியப்பட வைத்தது.

இந்த கதை வாயிலாக, நீங்கள் சொல்ல வரும் செய்தி? ஒரு பெண் எவ்வாறு தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இந்த சமுதாயத்தில் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன். எதிர்காலத்தில் நானும் அவ்வாறே வாழ்வேன்.
Post a Comment (0)
Previous Post Next Post