ரூ.1,000 உதவித்தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - உயர்கல்வித்துறை

அரசுப்பள்ளிகளில் 6-12 வரை படித்து, தற்போது கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 18-ம் தேதி வரை நீட்டிப்பு

கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள ரூ.1,000 உதவித்தொகைக்கான பதிவை வரும் 18 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: கல்லூரிமாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இது வரை 3.58 லட்சம் மாணவிகள் விண்ணபித்து உள்ளனர். இதற்கான கடைசி தேதி கடந்த 10 ம் தேதி வரை என கூறப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் 18 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post