இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கிரிப்பித் உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 5

கிரிப்பித் உதவித்தொகை

ஆஸ்திரேலியாவின் கிரிப்பித் பல்கலைக்கழகத்தில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்புகளை படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள், அப்பல்கலைக்கழகத்தின் உதவித்தொகையை பெறலாம்.

பல்கலைக்கழக அறிமுகம்:

1975ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் உருவாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பை உணர்ந்து அதற்கேட்ப படிப்புகளையும், கல்வி முறைகளையும் வழங்குகிறது. நவீன ஆசிய மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இப்பல்கலைக்கழகம்ம் சர்வதேச அளவிலான தரவரிசையில் முதல் 2 சதவீத இடங்களில் தொடர்ந்து நீடிக்கிறது.

6 கல்வி வளாகங்களில் மொத்தம் 50 ஆயிரம் மாணவர்களைக் கொண்டுள்ள இப்பல்கலைக்கழகம் 200க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளை வழங்குகிறது. சர்வதேச அளவிலான முன்னாள் மாணவர் கூட்டமைப்பில் 130க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 2.5 லட்சம் பட்டதாரிகள் இடம் பெற்றுள்ளனர். இரட்டை பட்டப்படிப்புகள்:

சந்தையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வேலைக்கு தேவையான படிப்பையும், மனதிற்கு பிடித்த படிப்பையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் வகையில், இரண்டு பட்டப்படிப்புகளை கற்கும் வாய்ப்பை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது. குறிப்பாக, கலை மற்றும் வணிகம், ஏவியேஷன் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்யூனிகேஷன், ஜர்னலிசம் மற்றும் வணிகம், இன்ஜினியரிங் மற்றும் டேட்டா சயின்ஸ், பல் மருத்துவம் மற்றும் வணிகம், என்விரான்மெண்டல் சயின்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் உட்பட பல்வேறு இரட்டை பட்டப்படிப்புகளை வழங்குகிறது.

உதவித்தொகை விபரம்:

கிரிப்பித் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் அனைத்து இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்விக்கட்டணத்தில் 50 சதவீதம் உதவித்தொகையாக, தகுதியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அடிப்படைத் தகுதிகள்:

* ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து நாட்டின் குடிமகனாக இருக்கக்கூடாது.

* முந்தைய படிப்புகளில் 5.5 அல்லது அதற்கு மேல் ஜி.பி.ஏ., மதிப்பெண் புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.

* இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான அனைத்து கல்வி மற்றும் ஆங்கில மொழி புலமை தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

காலம்: படிப்பு காலம் முழுவதிலும் 50 சதவீத கல்விக் கட்டணம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 5

விபரங்களுக்கு: https://www.griffith.edu.au/
Post a Comment (0)
Previous Post Next Post