தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சிறுவர், சிறுமியர்கள் எளிதாக கணக்கு, ஆங்கில பாடத்தை கற்றுக் கொள்ளும் வகையில் புதிய வகையான செஸ் விளையாட்டை உருவாக்கியுள்ளார் தையல் கடைக்காரர். அவர் குறித்த செய்தியை இங்கே பார்க்கலாம்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில், தையல் கடை நடத்தி வருபவர் முருகன். குழந்தைகள் மொபைல் மற்றும் டிவியில் மூழ்கி கிடப்பதை உணர்ந்து அதற்கு மாற்றாக புதிய வடிவிலான செஸ் விளையாட்டை இவர் உருவாகியுள்ளார்.
குழந்தைகள் கணக்கு, ஆங்கிலம் கற்க சிரமப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கு விளையாட்டு மூலம் பாடங்களைக் கற்பிக்கும் விதமாக சில எண்கணித முறையிலான செஸ் விளையாட்டையும், ரம்மி விளையாட்டையும் கண்டுபிடித்து மாணவர்களுக்கு அந்த விளையாட்டைப் பற்றி கற்பித்து வருகிறார்.
இந்த விளையாட்டைக் கற்றுக் கொண்ட மாணவர்கள் மிகவும் ஆர்வமாக விளையாடி வருகின்றனர். தற்போது பள்ளிகள் திறந்து விட்டாலும் கூட, இந்த விளையாட்டைக் கற்றுக் கொண்ட சிறுவர் சிறுமிகள் தங்களது பள்ளி நண்பர்களுக்கும் கற்றுக்கொடுக்கின்றனர். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் இந்த விளையாட்டை விளையாட மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விளையாடும் முறை:-
கணிதத்தின் அடிப்படையாக உள்ள கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவைகளை சிறுவர், சிறுமிகள் எளிதாக புரிந்துகொள்ள புதுமையான 'செஸ் போர்டு' உருவாக்கி உள்ளார் முருகன்.
புதுமையான செஸ் போர்டு..
இந்த விளையாட்டில் 45 கட்டங்கள் உள்ளன. போர்ட் நடுவிலுள்ள 25 கட்டங்களில் மட்டுமே காயின் நகர்வு இருக்கும். அதற்கு வெளியே 20 கட்டங்களில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலுக்கான விடைகள் 1 முதல் 100 வரையில் இடம்பெற்றிருக்கும். ஒரு போட்டியாளருக்கு 5 காயின்கள் வீதம் 2 போட்டியாளர்கள் மொத்தம் 10 காயின்கள் கொண்டு விளையாடலாம்.
இருவருக்கும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலுக்கு தலா ஒரு காயின்களும், அனைத்து பயன்பாட்டு குறியீடுகளுக்கான இரு காயின்களும் இருக்கும். காயின் நகரும் முறைகள் தனியாக வரையறுக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு நகர்வும் கூட்டல், கழித்தல் அல்லது பெருக்கல், வகுத்தல் பயன்பாடுகளில் மேற்கொள்ள வேண்டும் என்பது விதிமுறை. ஆங்கிலச் செஸ் விளையாட்டு :-
இதேபோல ஆங்கில எழுத்துக்கள் கொண்ட செஸ் விளையாட்டில் ஆங்கில வவ்வல்ஸ் எழுத்துக்கள் சிறிய ஆங்கில எழுத்து மற்றும் பெரிய ஆங்கில எழுத்தில் இருக்கும். ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் சதுரங்கத்தில் பிரத்தியோக நகர்வை கொண்டது. சதுரங்க விளையாட்டின் போது போட்டியாளரை நாம் வெட்டும் போது எத்தனை கட்டங்கள் நகர்ந்து வந்தோம் என்பதை பொருத்து வெட்டப்பட்ட காய் என்ன எழுத்தில் இருந்ததோ அதை முதல் எழுத்தாகக் கொண்ட ஏதேனும் ஒரு ஆங்கில வார்த்தையை போட்டியாளர் கூற வேண்டும் என்பதையே விதி.
சீட்டுக்கட்டு விளையாட்டு :-
ரம்மியை போன்றே இந்த விளையாட்டும் உள்ளது. சீட்டுக்கட்டு விளையாட்டில் ஒரு போட்டியாளருக்கு 13 கார்டுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கார்டுகளிலும் ஒரு ஆங்கில எழுத்து இடம்பெற்றிருக்கும் . இவ்விளையாட்டை விளையாடும் சிறுவர்கள் ஆங்கில எழுத்துக்களை வார்த்தையாக சேர்க்க வேண்டும் என்பதே விதி.
ஆர்வம் காட்டும் சிறுவர்கள் :-
இதனால் சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டே வகுத்தல், பெருக்கல் பயன்பாடுகளை எளிதாக கற்றுக் கொள்கின்றனர். இதேபோல் செஸ் உபகரணத்தில் 81 கட்டங்களை உருவாக்கி, எளிதாக ஆங்கில வார்த்தைகளை கற்பிக்கிறார். இதையும் சிறுவர் - சிறுமிகள் விரும்பி கற்றுக்கொண்டு விளையாடுகின்றனர். ட இதுகுறித்து டெய்லர் முருகன் கூறுகையில், "இந்தப் புதுவகை செஸ் விளையாட்டை உருவாக்கும் எண்ணம் சில வருடங்களுக்கு முன்பே எனக்கு இருந்தது. இந்த விளையாட்டை உருவாக்குவதற்கு இந்த கொரோனா காலம் எனக்கு உதவியது. விளையாட்டை உருவாக்கி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்த பின்னர் குழந்தைகள் ஆர்வமாக விளையாடுகின்றனர். இந்த விளையாட்டை பெரிதளவில் என்னால் எடுத்துச் செல்ல முடியவில்லை, அதற்கான பொருளாதார வசதி என்னிடம் இல்லை. குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தவுடன் எனது கடையிலேயே இந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர். மேலும், பல விளையாட்டு பொருட்களை தயாரிக்க என்னிடம் போதுமான நிதி இல்லை. விரைவில் இந்த விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வேன் என்றார்.. இந்த புதுமையான செஸ், ரம்மி விளையாட்டுக்கள் குறித்து சந்தேகம் பெற விரும்புவோர் 6379 524 829 என்ற எண்ணில் முருகனை தொடர்பு கொள்ளலாம்..