கூகுள் நிறுவனத்தின் அச்சுறுத்தல் பகுப்பாய்வு குழு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. அதில் இஸ்ரேலில் உள்ள NSO குழுமத்தின் பின்னணியில் இயங்கும் ஹெர்மிட் என்ற ஸ்பைவேர் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த ஹெர்மிட் ஸ்பைவேர் டொமைனில் இருக்கும் ஐபோன் மற்றும் ஆண்டிராய்ட் பயனர்களை குறிவைத்து தகவல்களை திருட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி மற்றும் கஜகஸ்தானில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த தகவல் திருட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஹெர்மிட் ஸ்பைவேரை RCS லேப்சுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்பு ஆராய்ச்சி குழுவின் அறிக்கை இதனை உறுதிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
ஹெர்மிட் ஸ்பைவேர் என்றால் என்ன?
மாடுலர் கண்காணிப்பு திறன் கொண்ட இந்த ஹெர்மிட் ஸ்பைவேர், பதிவிறக்கம் செய்யப்பட்டதும் தீங்கிழைக்கும் தொகுப்புகளை மறைத்து வைத்துக் கொள்கிறது. இந்த ஸ்பைவேர் ஆடியோவைப் பதிவு செய்வது மட்டுமல்லாமல், தொலைபேசி அழைப்புகளை தானாக செய்யவும் திருப்பிவிடவும் முடியும்.
ஆபத்தான இந்த ஸ்பைவேர், ஸ்மார்ட்போனில் அழைப்பு பதிவுகள், தொடர்புகள், புகைப்படங்கள், இருப்பிடம் மற்றும் SMS ஆகிய தகவல்களையும் சேகரிக்கிறது. எப்படி வேலை செய்கிறது?
ஸ்பைவேர் எஸ்எம்எஸ் செய்திகள் வழியாக அனுப்பப்படுகிறது. மேலும் உங்கள் மொபைலில் இருந்து சில வலைத்தளங்களை பின்னணியில் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னணியில் உங்கள் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஸ்பைவேர் முதலில் உங்கள் மொபைலில் உள்ள தகவல்கள் தேவையானதா என்றும், அதனை திருட முடியுமா என்றும் சோதிக்கிறது. உங்கள் மொபைலில் இதனை பதிவிறக்கம் செய்தவுடன் அந்த வலைத்தள பக்கமே உங்கள் தகவல்களை திருடுவதற்கான செயல்பாடுகளை தொடங்கிவிடும்.
பாதுகாத்துக் கொள்வது எப்படி?
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் மொபைல் ஓஎஸ்ஸின் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்குவதன் மூலம் இதனை தடுக்க முடியும். மேலும், தேவையில்லாத ஆப்களை பதிவிறக்குவதோ மற்றும் வலைத்தளங்களை பார்ப்பதையோ தவிர்த்தால் போதும்.