கிரெடிட் கார்டை லாபகரமாக பயன்படுத்துவது எப்படி?

கிரெடிட் கார்டை லாபகரமாக பயன்படுத்த வழி கூறும், நிதி ஆலோசகர் த.ராஜன்: கிரெடிட் கார்டுக்கான கட்டணத்தை முழுமையாக கட்டுவதால், வட்டி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. அப்படியே சற்று தாமதம் ஏற்பட்டாலும், குறைவான வட்டியே செலுத்த வேண்டி இருக்கும். நுகர்வோர் கடன், கார் கடன், வீட்டை அழகு செய்ய என, பெரியளவில் கடன் வாங்குவதாக இருந்தால், வங்கி மூலம் குறைந்த வட்டியில் வாங்கலாம்.சின்ன சின்ன செலவுகளுக்கு கிரெடிட் கார்டை பயப்படுத்தினாலும், அதற்கான பணம் செலுத்துவதை தாமதப்படுத்தாதீர். தாமதக் கட்டணம், கூடவே வட்டியும் சேர்ந்து அதிக தொகை செலுத்த வேண்டி வரும். அடுத்து, ஆண்டு கட்டணம் இல்லாத கார்டுகளாக பார்த்து தேர்வு செய்யலாம். பல முன்னணி வங்கிகள், இலவச கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன.அவற்றை பயன்படுத்துவதால், ஆண்டு கட்டணம் என்ற வகையில் சில ஆயிரம் ரூபாயை தண்டமாக செலுத்துவதை தவிர்க்கலாம். கிரெடிட் கார்டை தொடர்ந்து சரியாகப் பயன்படுத்தி வந்தால், உங்களின், 'கிரெடிட் ஸ்கோர்' உயரும். அது, எதிர்காலத்தில் அதிக தொகையுடன், குறைந்த வட்டியில் கடன் பெற உதவும்.பிரபல கிரெடிட் கார்டு நிறுவனங்கள், நீங்கள் செலவு செய்யும் தொகையில் குறைந்தபட்சம் 1, 2 சதவீத தொகையை, 'ரிவார்டு பாயின்ட்' ஆக வழங்கும்.நீண்ட காலத்தில் இது பெரிய தொகையாக மாறும். இதைப் பயன்படுத்தும்போது, புதிதாக வாங்கும் பொருளின் விலை கணிசமாகக் குறையும். கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் போது, அதிகபட்சம், 52 நாட்களுக்கு வட்டி இல்லாத கடன் காலத்தைப் பெற முடியும். கடன் சுழற்சி ஆரம்பிக்கும்போது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், இப்படி அதிகபட்ச இலவச வட்டி காலத்தைப் பயன்படுத்தலாம்.உதாரணமாக, உங்களின் கட்டணம் செலுத்துவது, ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி என்றால், 16- முதல்25-ம் தேதிக்குள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதை வழக்கமாக்கி கொள்ளலாம்.அதன்பின், அடுத்த கட்டண சுழற்சி வரும் வரை, வேறு பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்யும்பட்சத்தில், அதிக நாட்கள் வட்டி இல்லா காலத்தைப் பெற முடியும்.திட்டமிடல் மூலம் நிதி இலக்குகளை நிர்ணயித்து செயல்பட ஆரம்பித்தால், தேவையில்லாமல் பல பொருட்களை வாங்குவது தவிர்க்கப்படும். இது தவிர, கடனில் பொருட்களை வாங்குவதும் குறையும்.
Post a Comment (0)
Previous Post Next Post