நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் லைசன்ஸ் ரத்து - இன்று முதல் அமல்

‛‛வேலுாரில், நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் டிரைவிங் லைசன்ஸ் தானாகவே ரத்து ஆகி விடும்,'' என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். வேலுார் மாவட்டம், வேலுாரில் எப்போதும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவதே இதற்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து வேலுார் போக்குவரத்து போலீசார் இன்று முதல் புதிய நடைமுறையை கொண்டு வந்தனர்.

லைசன்ஸ் ரத்து:

இது குறித்து வேலுார் ஏ.எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் கூறியதாவது: வேலுாரில் நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை அபராதம் செலுத்தினால் 4 வது முறை தானாகவே அவர்கள் டிரைவிங் லைசன்ஸ் ரத்து ஆகி விடும். அபராதம் செலுத்தும் விவரம் ஆன் லைனில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீசார் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்
Post a Comment (0)
Previous Post Next Post