எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணத்தை எப்படி எடுக்கலாம் என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம் .
சிலர் வெளியில் கிளம்பும் பொழுது அவசரஅவசரமாக ஏடிஎம் கார்டு எடுக்காமல் சென்று விடுவார்கள்.
பின்னர் ஏடிஎம் மெஷினுக்கு அருகில் சென்ற பிறகுதான் ஏடிஎம் கார்டை எடுத்து வரவே இல்லை என்பது தெரியவரும். இதுபோன்ற சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்? பணம் மிகவும் அவசரம் என்று நிலையில் திரும்பவும் வீட்டுக்கு சென்று ஏடிஎம் கார்டை எடுத்து வருவது மிகவும் கஷ்டம். இது போன்ற சமயங்களில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை சில வங்கிகள் வழங்குகின்றன. எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வழங்குகிறது. அது எப்படி என்றால், எச்டிஎப்சி வங்கியின் நெட் பேங்கிங் வசதியில் சென்று ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.
முதலில் பயனாளி பெயரை இணைக்க வேண்டும்.
Fund Transfer -> Request -> Add a Benificiary -> cardless cash withdrawal என்று கிளிக் செய்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.
பின்னர் பயனாளியின் விவரங்களைப் பதிவிட்டு Add and Confirm கொடுக்க வேண்டும். மொபைல் நம்பருக்கு ஓடிபி நம்பர் வரும். அதைப் பதிவிட வேண்டும்.
மீண்டும் நெட் பேங்கிங் வசதியில் சென்று Fund Transfer வசதியில் Cardless cash withdrawal என்பதில் Debit card account என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் நீங்கள் ரெஜிஸ்டர் செய்த பயனாளியைத் தேர்வு செய்து, பின்னர் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு Continue and Confirm கொடுக்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட வேண்டும். பயனாளியின் மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபியும், 9 இலக்க ஆர்டர் நம்பரும் வழங்கப்படும்.
பணத்தை எடுக்கும் நபர் ஏடிஎம் மையத்துக்குச் சென்று ஏடிஎம் ஸ்கிரீனில் உள்ள Cardless cash withdrawal என்ற வசதிக்குள் சென்று மொழியைத் தேர்ந்தெடுத்த பின்னர் ஓடிபி நம்பரையும் ஆர்டர் நம்பரையும் பதிவிட வேண்டும். இதில் எடுக்க வேண்டிய தொகையை பதிவிட்டால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.