ATM கட்டணம் ஜன., 1ல் உயர்கிறது

ஏ.டி.எம்.,களில் -பணம் எடுப்பதற்கான கட்டணம் ஜன., 1 முதல் உயர்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு:ஏ.டி.எம்., பராமரிப்பு செலவுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம், 2014க்கு பின் உயர்த்தப்படவில்லை. செலவு அதிகரிப்பதால் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனைத்து வங்கிகளும் அனுமதி கோரியிருந்தன. வங்கிகளின் கோரிக்கையை ஏற்ற ரிசர்வ் வங்கி, கட்டணத்தை உயர்த்த ஜூனில் அனுமதி அளித்தது. இதனால் ஜன., 1 முதல் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.,களில் மாதத்துக்கு ஐந்து முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். கணக்கு இல்லாத வங்கிகளின் ஏ.டி.எம்., என்றால் மாநகரங்களில் மூன்று முறையும், நகரங்களில் ஐந்து முறையும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.

அனுமதிக்கப்பட்ட இந்த தவணை முடிந்த பின் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும், பரிவர்த்தனை கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது; இது, ஜன., 1 முதல் 21 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., கட்டணம் 8 ரூபாய் வசூலிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Post a Comment (0)
Previous Post Next Post