TNPSC தோ்வுகளுக்கு நேரடி இலவச பயிற்சி - புதன்கிழமை (செப்டம்பா் 29) தொடக்கம்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தோ்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதன்கிழமை (செப்டம்பா் 29) தொடங்குகிறது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பொது முடக்க விதிகளால் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4, குரூப் 2 பணி இடங்களுக்கான தோ்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம் சாா்பில் இணையவழி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன.


பொதுமுடக்கத் தளா்வால் செப்டம்பா் 29ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நேரடி பயிற்சி வகுப்பு துவங்குகிறது.


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0424-2275860 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Comments

Post a Comment
Previous Post Next Post