குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு - 6-ந் தேதி தொடங்குகிறது

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்தில் குரூப்-4 தேர் வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 6-ந் தேதி தொடங்குகிறது.
இலவச பயிற்சி வகுப்பு

தஞ்சை மாவட்ட கலெக் டர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன் னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய பணியாளர் தேர்வா ணையம் உள்ளிட்ட தேர்வா ணையங்கள் மற்றும் வங்கிக ளால் அறிவிக்கப்படும் போட்டி தேர்வில் பங்கேற்கதயாராகும் தஞ்சை மாவட் டத்தைசேர்ந்தஇளைஞர்கள் பயன்பெறும் வகையில் இல வச பயிற்சி வகுப்புகள் நடத் தப்பட்டு வருகின்றன.

கொரோனா பெருந் தொற்று பரவல் மற்றும் அதை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்கள் பயிற்சி பெற இணையவழி யில் பயிற்சி வகுப்புகள் நடத் தப்பட்டு வருகின்றன. இந்தநி லையில் தமிழகஅரசு கடந்த 1-ந்தேதி முதல் பயிற்சி வகுப்பு நேரடியாக இயங்க அனுமதி வழங்கி உள்ளது.

எனவே பயிற்சி வகுப்பில் போட்டித்தேர்வுக்கு தயாரா கும் தஞ்சையை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் பெயர் மற்றும் கல்வி தகுதியை குறிப் பிட்டு studycircletnj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவ ரிக்கோ 8110919990 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கோ தகவல் அனுப்ப வேண்டும்.
Post a Comment (0)
Previous Post Next Post