ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வருகின்ற 18-ந் தேதி நேர்காணல் - மின்வாரிய அதிகாரி தகவல்

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு நேர்காணல் |
மின்வரிய அதிகாரி தகவல்

தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் விஜயகவுரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக மின் வாரிய தலைவர் உத்தரவுப்படியும், திருச்சிதலைமை பொறியாளர் ஆணைப்படியும் தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட ஐ.டி.ஐ. படித்து பட்டம் பெற்றவர்களுக்கு (வயர்மேன் மற்றும் எலக்ட்ரீசியன் பாடப்பிரிவு பயின்றவர்கள்) அப்ரண்டீஸ்க்கான நேர்காணல் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

ஐ.டி.ஐ. படித்து பட்டம் பெற்றவர்கள் அரசு துறையிலோ அல்லது தனியார் துறையிலோ ஏற்கனவே அப்ரண்டீஸ் முடிக்காதவர்கள் 40 வயதுக்கு உட்பட்டோர் மட்டும் வல்லம் நம்பர்-1 சாலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நேர்காணலுக்கு வருபவர்கள் கல்வித்தகுதி சான்றிதழ், வயது, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் மற்றும் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்று அசல் மற்றும் நகல்களுடன் நேரில் வர வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post