நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்துதல் சார்பாக -

A. RAJA
Member of Parliament Chief Whip DMK Parliamentary Party - 04-09-2021

பெறுதல்,
மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு தலைமை செயலகம், சென்னை-600009.

பொருள்: நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்துதல் சார்பாக

எனது நீலகிரி நாடளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டத்தில் உள்ள கடைகோடி மலை கிராமமான கோட்டாடையில் 8 ஆம் வகுப்பு முடிக்கும் குழந்தைகள் 9ஆம் வகுப்பு பயில 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆசனூர் உயர்நிலை பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதியில் பேருந்து வசதியும் குறைவு மற்றும் வனவிலங்குகள் தொல்லையும் அதிகம். எனவே அப்பகுதியில் உள்ள 10 மலை கிராமங்களை சார்ந்த குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு கோட்டாடை நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்திட ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Post a Comment (0)
Previous Post Next Post