ஆசிரியர்களே முந்துங்கள்... இன்று மாலை வரைதான் அவகாசம்
தமிழகத்தில் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரத்து 331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை தற்காலிக ஆசிரியர் நியமனம் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதன்படி, TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் தகுதி வாய்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் கடந்த 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு அனுப்புமாறு மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.