சரியாக படிக்கவில்லை...4 வயது மகளை அடித்துக்கொன்று முட்புதரில் வீசிய பெற்றோர் - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 6, 2022

சரியாக படிக்கவில்லை...4 வயது மகளை அடித்துக்கொன்று முட்புதரில் வீசிய பெற்றோர்

இந்த சம்பவம் ஜூன் 29-ம்தேதி நடந்துள்ளது. வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவன் - மனைவியிடம் விசாரணை நடத்தினர். ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பம் மாவட்டம் பிரிகொரா கிராமத்தை சேர்ந்த உத்தம் மைத்தி (27). அவரது மனைவி அஞ்சனா மஹடொ (26). இந்த தம்பதிக்கு 4 வயதில் மகள் உள்ளார்.

4 வயதான அந்த பெண் குழந்தையை அருகில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடத்தில் பெற்றோர் சேர்த்துள்ளனர். ஆனால், குழந்தை சரியாக படிக்காமல் விளையாடுவதாக பெற்றோர் கருதியுள்ளனர்.

சரியாக பாடம் படிக்கும்படி கூறியும் குழந்தை படிக்காததால் ஆத்திரமடைந்த பெற்றோர் குழந்தையின் கைகளை கட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், குழந்தை மயக்கமடைந்துள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உயிரிழந்த குழந்தையை எடுத்துக்கொண்டு சல்கஞ்ச்ஹரி நகரில் இருந்து ரெயிலில் ஏறி ஹலுதி நகருக்கு சென்றுள்ளனர்.

அங்கு ரெயில் நிலையம் அருகே இருந்த முட்புதருக்குள் குழந்தையை வீசிவிட்டு தம்பதி வீட்டிற்கு வந்துள்ளனர். இந்த சம்பவம் ஜூன் 29-ம் தேதி நடந்த நிலையில் ஒரு வாரம் கழித்து தம்பதி தங்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த தம்பதியிடம் குழந்தை எங்கே என அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர்.

அதற்கு இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த செவ்வாய்கிழமை கணவன் - மனைவியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சரியாக படிக்காததால் தங்கள் 4 வயது மகளை கடுமையாக தாக்கியது, அதில் குழந்தை உயிரிழந்ததையும் இருவரும் ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து கணவன் மனைவியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot