Post Top Ad
Your Ad Spot
Sunday, July 31, 2022
Home
Department of School Education
Latest News
ஐம்பெரும் விழா
பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஐம்பெரும் விழா!
பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஐம்பெரும் விழா!
திண்டிவனம் : திண்டிவனம் கல்வி மாவட்ட ஒலக்கூர் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.புனித அன்னாள் பள்ளி கூட்ட அரங்கில் நடந்த விழாவிற்கு, வட்டார கல்வி அலுவலர் சுபத்ரா, மேற்பார்வையாளர் சங்கர் வரவேற்றனர். வட்டார கல்வி அலுவலர் அக்சிலியம் பெலிக்ஸ் நோக்கவுரையாற்றினார்.
பள்ளி துணை ஆய்வர் பாலசுப்ரமணிய பாரதி வாழ்த்திப் பேசினார்.மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை உதவி திட்ட அலுவலர் தனவேல், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்து, தன்னார்வலர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினர்.விழாவில் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களுக்கு பதக்கமும், மாரத்தான் போட்டியில் மாநில அளவில் 18வது இடமும், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவரும் கவுரவிக்கப்பட்டனர். ஐந்து வயதுடைய 1129 மாணவர்களை பள்ளியில் சேர்த்தமைக்கும், இ.எம்.ஐ.எஸ்., பதிவுகளில் சாதனைக்கு வித்திட்ட தலைமையாசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். இல்லம் தேடிக்கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் நன்றி கூறினார்.
Tags
# Department of School Education
# Latest News
# ஐம்பெரும் விழா
# பள்ளிக்கல்வித்துறை
About sathish
பள்ளிக்கல்வித்துறை
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.

No comments:
Post a Comment