இன்ஜினியரிங் படிப்பில் பிளம்பிங் பாடம்

நாடு முழுவதிலும் உள்ள இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்சர் கல்வி நிறுவனங்களில் பிளம்பிங் படிப்பை வழங்க, ஏ.ஐ.சி.டி.இ., என அழைக்கப்படும் அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு, இந்தியன் பிளம்பிங் அசோசியேஷன் - ஐ.பி.ஏ., உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சகஷ்ரபுத்தே மற்றும் ஐ.பி.ஏ., தேசிய தலைவர் குர்மித் சிங் அரோரா ஆகியோர் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதன் வாயிலாக, இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர், இன்டீரியர் டிசைனிங் படிக்கும் மாணவர்கள் மற்றும் சிவில், என்விரான்மெண்டல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர் பட்டதாரிகள், பிளம்பிங் - வாட்டர் மற்றும் சானிடேஷன் பாடத்தை படித்து 4 கிரெடிட் பெறலாம்.

கட்டடத்தின் வலிமையை அதிகரிக்க ’பிளம்பிங்’ மிக அவசியம் என்பதை உணர்ந்து 80 சதவீத தியரி மற்றும் 20 சதவீத செயல்முறை பயிற்சி அடங்கிய இந்த 50 மணிநேர பாடம் இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்சர் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post