அரசுப்பள்ளி கட்டிடத்தை இடித்து நொறுக்கிய ஒன்றிய கவுன்சிலர் மீது புகார்: கலெக்டர் விசாரணை

பள்ளி கட்டிடத்தை இடித்து நொறுக்கிய அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மீது புகார்: கலெக்டர் விசாரணை

திருவள்ளூர்: பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திய அதிமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருவள்ளூர் கலெக்டர், போலீசில் புகார் கொடுத்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெண்மனம் புதூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வடக்கு பக்கம் உள்ள கட்டிடம் சேதம் அடைந்து மோசமான நிலையில் இருந்தது. இதனால் அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற ஒன்றியக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து சேதம் அடைந்து காணப்பட்ட கட்டிடத்துக்கு பதிலாக கிழக்கு புறத்தில் நன்றாக இருந்த வகுப்பறை கட்டிடத்தை இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எவ்வித அனுமதியும் ஒப்பந்தமும் இல்லாமல் கடம்பத்தூர் ஒன்றியம் 2 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சுரேஷ், தன்னிச்சையாக முடிவெடுத்து கிழக்கு பக்கம் நன்றாக இருந்து கட்டிடத்தை இடித்துவிட்டார்.

இதுபற்றி திமுக மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ‘’ இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராம்குமார், கடம்பத்தூர் போலீசில் கொடுத்துள்ள புகாரில், ‘’ 2வது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் என்பவர் கடம்பத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட வெண்மனம் புதூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் வகுப்பறை கட்டிடத்தை எந்தவித அனுமதியும் இல்லாமல் விதிகளை மீறி இடித்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

‘’நன்றாக இருந்த அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய அதிமுக கவுன்சிலர் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Post a Comment (0)
Previous Post Next Post