நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவு வங்கிக் கடன் மூலமாக தான் பெரும்பாலும் முழுமை பெறுகிறது. ஆனால் அதனை பெறுவதற்கு மாதக் கணக்கில் செருப்புகள் தேய வங்கிப் படிகட்டுகளில் ஏறி இறங்க வேண்டியுள்ளது. இதற்காகவே கூடுதல் வட்டி கட்டினாலும் பரவாயில்லை என பிற இடங்களில் மக்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உங்களது வங்கிக் கடன் விண்ணப்பத்திற்கு உடனே ஒப்புதல் கிடைக்க என்னென்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.
சிபில் ஸ்கோர்
நல்ல சிபில் ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் வீட்டுக் கடனை விரைவாகப் பெறுவதற்கு முக்கியம். சிபில் என்பது ஆர்பிஐ.,யால் அங்கீகரிக்கப்பட்ட நான்கு கடன் அமைப்புகளில் ஒன்று. இது இந்தியர்கள் அனைவரின் கடன் தரவுகளையும் வைத்திருக்கும். சிபில் ஸ்கோரை அதிகரிக்க கிரெடிட் கார்டு பில்கள் போன்ற உங்கள் தவனைகளை சரியான நேரத்திற்குள் செலுத்துங்கள்.
கிரெடிட் கார்டில் அனுமதிக்கப்பட்ட கடன் அளவை விட குறைவாகவே பயன்படுத்துங்கள். உதாரணத்திற்கு மாதம் ரூ.50 ஆயிரம் செலவிட முடியும் எனில் ரூ.30 ஆயிரத்துக்கு மட்டும் கிரெடிட் கார்டை பயன்படுத்துங்கள். கடன் பாக்கி இருந்தால் விரைவில் செலுத்த முயற்சிக்கவும். கடன் அறிக்கையை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளுங்கள். பிழைகள் ஏதேனும் இருந்தால் மாற்றக் கோருங்கள்.
சரியான நிறுவனத்தை கண்டறியவும்
சில வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றவர்களை விட வேகமாக உங்கள் வீட்டுக் கடனை அங்கீகரிக்கக் கூடும். சந்தையில் ஏராளமான வாய்ப்புகள் தற்போது உள்ளன. ஒவ்வொரு நிறுவனத்தின் கடனுக்கான ஒப்புதல் நேரத்தை தெரிந்துகொள்ளுங்கள். நமது சிபில் ஸ்கோர், வருமானம் மற்றும் பிற காரணிகளை அளித்து வீட்டுக் கடனுக்கான முன் ஒப்புதலைப் பெற முனையுங்கள். இதன் மூலம் நீங்கள் கடன் வழங்க ஏற்ற நபர் என முடிவெடுப்பர். இது கடனுக்கு விண்ணப்பிக்கும் போது செயல்முறையை எளிதாக்கும். அதிக முன்பணம்
வீட்டுக் கடனுக்கான ஒப்புதலை விரைவாகப் பெற செய்ய வேண்டிய விஷயங்களில் ஒன்று டவுன் பேமென்ட் எனும் முன்பணத்தை அதிகம் வழங்குவதாகும். கடன் நிறுவனங்கள், வங்கிகள் பொதுவாக வீட்டு மதிப்பில் 20 சதவீதம் முன்பணத்தை எதிர்பார்ப்பார்கள். அதற்கேற்ப நாம் 20 சதவீதத்திற்கு மேல் வழங்கினால் நமது கடனை அங்கீகரிக்கும் வாய்ப்பு அதிகமாக்கும். மேலும் நமது வட்டி வீதமும் குறையும். 20 சதவீதத்திற்கு மேல் முன்பணம் செலுத்த முடியாத நிலை எனில் வேலைக்குச் செல்லும் மனைவி அல்லது சகோதரருடன் இணைந்து விண்ணப்பிக்கலாம்.
எல்லா தகவல்களையும் திரட்டிக்கொள்ளுங்கள்
வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் உங்கள் நிதி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் திரட்டிக்கொள்ள வேண்டும். சிபில் ஸ்கோரை முன்னர் இருந்தே ஒழுங்காக பராமரிப்பது, உங்கள் வருமானம், கடன்கள் மற்றும் சொத்துக்கள் பற்றிய தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்களையும் கையில் வைத்திருக்க வேண்டும்.