TN Education : பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் சுமார் 9% அதிகமாக தேர்ச்சிபெற்றுள்ளனர். இதனிடையே தமிழ்நாட்டில் தேர்வு முடிவு வெளியான ஒரேநாளில் 11 பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 28 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வியால் இந்த விபரீத முடிவு எடுத்துள்ளனர்.
இந்நிலையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் துணைத் தேர்வில் வெற்றி பெற ஏதுவாக தோல்வியுற்ற 10 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அவரவர் படித்த பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை நடத்தி தேர்வில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.