WhatsApp மெசேஜ் - டெலிட் செய்யும் (Delete For Everyone) அவகாசம் அதிகரிப்பு!

வாட்ஸ் ஆப் மெசேஜ் - டெலிட் செய்யும் அவகாசம் அதிகரிப்பு.

வாட்ஸ் ஆப் பயனர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

அதன்படி, நாம் அனுப்பிய செய்தியில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை நிரந்தரமாக டெலிட் (Delete For Everyone) செய்யும் வசதியை வாட்ஸ் ஆப் வழங்கி வருகிறது.

டெலிட் பார் எவரிஒன் (Delete For Everyone) ஆப்ஷன் மூலம், செய்தியை அனுப்பிய, ஒரு மணி நேரம் 8 நிமிடம் 16 விநாடிகளுக்குள் மட்டுமே நிரந்தரமாக டெலிட் செய்ய முடியும். இந்த கால அவகாசத்தை நீட்டிக்க கோரி பயனர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து, டெலிட் பார் எவரிஒன் ஆப்ஷனுக்கான கால அவகாசம், 2 நாள் 12 மணி நேரமாக மாற்றப்பட உள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல், வாட்ஸ் ஆப் குழுவில் உள்ள உறுப்பினர்கள் பதிவிட்ட செய்திகளை, குழுவின் அட்மின் நிரந்தரமாக டெலிட் செய்வதற்கான வசதியும் கொண்டு வரப்பட உள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post