மாணவனை அடித்த 3 ஆசிரியைகளிடம் விசாரணை

An investigation is underway against 3 teachers who beat a UKG student at a private school in Peravallur, Chennai. The education officer is investigating the abortion with 3 teachers. Three teachers were arrested yesterday and released on bail following a complaint lodged by the student's parents.

ஆசிரியைகளிடம் விசாரணை

சென்னை பெரவள்ளூரில் தனியார் பள்ளியில் யுகேஜி மாணவனை அடித்த 3 ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 3 ஆசிரியைகளிடம் கல்வி அலுவலர் கற்பகம் விசாரணை நடத்தி வருகிறார். மாணவனின் பெற்றோர் அளித்த புகாரில் நேற்று 3 ஆசிரியைகள் கைதாகி பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

3 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

சரியாக படிக்கவில்லை என யுகேஜி மாணவனை அடித்த 3 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி டெய்சி ராணி. இவர்களது 6 வயது மகன், பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். கடந்த 9ம் தேதி இந்த சிறுவன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளான். இந்நிலையில், காலை 11 மணிக்கு சிறுவனின் தாயாரை செல்போனில் தொடர்புகொண்ட பள்ளி ஆசிரியர், உங்கள் மகன் மயங்கி விழுந்துவிட்டான். எனவே, உடனடியாக பள்ளிக்கு வர வேண்டும், என தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் அனுமதி

அதன்பேரில், சிறுவனின் தாயார் பள்ளிக்கு சென்றபோது, சிறுவன் மூச்சுத்திணறலால் அவதிப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி ஆசிரியர்களிடம் கேட்டபோது, சிறுவன் ஏபிசிடி சரியாக எழுதவில்லை என்று பள்ளி ஆசிரியர் அடித்தது தெரியவந்தது. உடனே சிறுவனை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து சிறுவனின் தாயார் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, மாணவனை அடித்ததாக பள்ளி ஆசிரியர்கள் பிரின்ஸி (26), இன்டியனாவான் (60), மோனா பெராரா (47) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், 3 ஆசிரியர்களும் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும், இதுதொடர்பாக குழந்தைகள் நல வாரிய அலுவலர் சசிகலா விசாரணை நடத்தி வருகிறார்.
Post a Comment (0)
Previous Post Next Post