பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அமைச்சருக்கு அனுப்பிய மனு வைரல்

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடத் திட்டத்தை குறைக்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு மாணவர்கள் சார்பில் அனுப்பிய மனு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.த மிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்தனர்.

நடப்பாண்டிற்கான பாடங்களை ஆன் லைன் மூலமே நடத்தினர். சில மாதங்களாக நேரடியாக வகுப்புகள் நடக்கிறது. இந்நிலையில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மே மாதம் நடக்கிறது. இந்நிலையில் மாணவர்கள் சார்பில் தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷிற்கு அனுப்பிய மனு:கொரோனா ஊடரங்கு தளர்விற்கு பிறகு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் குறுகிய காலமே நடந்ததால், மொத்த பாடங்களையும் நடத்தி முடிக்கவில்லை.

தேர்வுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான காலமே உள்ளது. மீதமுள்ள பாடங்களை அவசரமாக நடத்தினாலும் எங்களால் அனைத்து பாடங்களையும் படித்து முடிக்க இயலாது. எனவே முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு பாட திட்டத்தை மட்டும் பொது தேர்வுக்கான பாடங்களாக அறிவித்தால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். இந்த மனு சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Post a Comment (0)
Previous Post Next Post