இளிச்சவாயனாக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் - Facilitated Intermediate Teachers

இளிச்சவாயனாக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் - Facilitated Intermediate Teachers

எப்படியும் பல்வேறு குழுக்களில் இது பகிரப்பட்டு உங்களிடம் வந்தடையும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறோம்:

உங்களிடம் கேட்பதற்கு நிறைய இருந்தாலும் தற்போது வெறும் 5 கேள்விகள் மட்டுமே உள்ளன.

1. கோடை விடுமுறையில் பயிற்சிக்கு சென்றவர்கள் யார்? இடைநிலை ஆசிரியர்களா? பட்டதாரி ஆசிரியர்களா? நடுநிலை & தொடக்கநிலை தலைமையாசிரியர்களா? உங்கள் பதில் "இடைநிலை ஆசிரியர்களில் 1 முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மட்டும்தான்" என்பதாக இருக்குமேயானால் அவர்களுக்கு மட்டும் தானே ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட வேண்டும்???

2. பட்டதாரி ஆசிரியர்களுக்கோ, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கோ, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கோ 9ஆம் தேதி வரை விடுமுறை விடக்கூடாது என்று நாங்கள் சொல்வதாக நீங்கள் வழக்கம்போல் திரிக்கக் கூடாது.. நாங்கள் கேட்பது பிறரின் உரிமையைப் பறிப்பதற்காக அல்ல ...எங்கள் உரிமையை கேட்பதற்காக... அவர்களுக்கு 9ஆம் தேதி வரை விடுமுறை விடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.. ஆனால் எங்களுக்கு அதேபோல் 9-ஆம் தேதி வரை விடப்படும் விடுமுறைக்கு மட்டும் ஏன் ஈடுசெய்விடுப்பு என்ற பெயரை கொடுக்கிறீர்கள்??? எங்களுக்கு அது ஈடுசெய் விடுப்பு என்றால் அவர்களுக்கு அந்த நாட்களில் (06.10.2022 முதல் 08.10.22) விடப்படும் விடுப்பிற்கு என்ன பெயர்??

3. விடுமுறை நாளில் நாங்கள் பயிற்சி சென்றதால் எங்களுக்கு ஈடுசெய்விடுப்பு என்றால்,விடுமுறை நாளில் விடுமுறையிலேயே இருந்த பிறருக்கு எப்படி ஈடுசெய் விடுப்பு பொருந்தும்???

4. மீண்டும் சொல்கிறோம் "அவர்களுக்கு 6ஆம் தேதி பள்ளி திறங்கள்" என்று நாங்கள் சொல்லவில்லை... 9ஆம் தேதியே திறக்கட்டும்... உங்கள் செயல்முறையிலுள்ள அந்த ஈடுசெய் விடுப்பு என்பதை மட்டும் எடுத்துவிடுங்கள்.. (06.10.22 முதல் 09.10.22 வரை உள்ள மூன்று நாட்களைத் தவிர்த்து) வேறு ஏதேனும் மூன்று நாட்களுக்கு ஈடுசெய்விடுப்பு அளித்தால் இதற்கு உண்மையான தீர்வாக இருக்கும்.. இதை செய்வீர்களா??

5. அது ஏன் சார் இடைநிலை ஆசிரியர்களை மட்டும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறீர்கள்?? உங்கள் அளவிற்கு அறிவோ, திறமையோ இல்லாத எங்களுக்கே இந்த கடிதத்தை படித்தவுடன் இவ்வளவு லாஜிக் குறைவு தெரிகிறது என்றால், உங்களுக்குத் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை ... இருந்தும் அந்தக் கடிதத்தை வெளியிடுகிறீர்கள் என்றால் இடைநிலை ஆசிரியர்கள் தானே என்ற இளக்காரம் தவிர வேறென்ன இருக்க முடியும்???

ஊதியத்திலும் பாதி ஊதியம்...

பயிற்சியிலும் பலிகடா...

இப்போது விடுமுறையிலும் இளிச்சவாயன்...

நன்றி

இவற்றிக்கு காலம் விரைவில் பதில் சொல்லும்...

இவண்,

எல்லாவற்றிற்கும் இளிச்சாவாயனாகும் இடைநிலை ஆசிரியன்...
Post a Comment (0)
Previous Post Next Post