முன்னாள் ராணுவத்தினர் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மருத்துவ படிப்பு:

தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களில் ஒரு இடத்தை முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு அல்லது பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் அனுமதிக்க தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை ஆத்திகுளம் பிரகாசம் தாக்கல் செய்த மனு:

என் தந்தை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார். என் மகள் பாரதி. நீட் தேர்வில் 720 க்கு 324 மதிப்பெண் பெற்றார். நாங்கள் பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்கள். அதற்குரிய ஜாதிச்சான்றை இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கவில்லை. விசாரணை நிலுவையில் உள்ளது.

மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்க வாய்ப்பிருந்தும் ஜாதிச் சான்று வழங்குவதில் தாமதத்தால் என் மகளின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கும் சூழல் உள்ளது. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான சலுகையை எங்கள் குடும்பத்தில் யாரும் அனுபவிக்கவில்லை. அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

என் மகளை விட நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிலருக்கு பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப்படிப்பில் கல்லுாரிகளில் இடம் கிடைத்துள்ளது. தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் 24 இடங்கள் காலியாக உள்ளன. அதில் ஒரு இடத்தை என் மகளுக்கு (எம்.பி.பி.எஸ்.,/பி.டி.எஸ்.,) முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு அல்லது பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.
Post a Comment (0)
Previous Post Next Post