NEET answer sheet - நீட் தேர்வு விடைத்தாளை பார்க்க மாணவிக்கு அனுமதி

நீட் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் கிடைத்த மாணவி விடைத்தாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உயர் நீதிமன்றக் கிளை அனுமதி அளித்துள்ளது.



மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெயசித்ரா நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டை நேரில் ஆய்வு செய்ய அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீட் தேர்வில் 200 கேள்விகளுக்கு 141 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதி இருப்பதாக மாணவி ஜெயசித்ரா தெரிவித்தார்.



தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த ஓஎம்ஆர் சீட்டில் எனக்கு 720-க்கு 564 மதிப்பெண் என இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவுகளில் எனக்கு 114 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாகக் கூறி மாணவி ஜெயசித்ரா வழக்கு தொடர்ந்தார்.



மனுவை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன் நீட் விடைத்தாளை நேரில் பார்க்க மாணவிக்கு அனுமதியளித்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Post a Comment (0)
Previous Post Next Post