Children go to school with gun protection in Kerala - கேரளாவில் துப்பாக்கி பாதுகாப்புடன் பள்ளி செல்லும் குழந்தைகள்

கேரளாவில் துப்பாக்கி பாதுகாப்புடன் பள்ளி செல்லும் குழந்தைகள் - Children go to school with gun protection in Kerala

கேரளாவில் தெருநாய்களின் தொந்தரவு குறித்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், அங்கு ஒருவர், பள்ளி மாணவியரை துப்பாக்கி ஏந்தியபடி அழைத்துச் செல்லும் 'வீடியோ' சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில், சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிகின்றன.இதுதொடர்பாக, வழக்கறிஞர் வி.கே.பிஜூ என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெருநாய்களை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவும், 'ரேபிஸ் வைரஸ்' தொற்றுள்ள நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் உத்தரவிட்டனர்.

மேலும், தெருநாய்களுக்கு உணவு கொடுப்பவரே, அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பேக்கல் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் பள்ளி குழந்தைகளை துப்பாக்கி ஏந்தியபடி அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, ''குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் பள்ளிக்கு செல்லவே குழந்தைகள் பயப்படுகின்றனர். ''அதனால்தான், இந்த 'ஏர் கன்' துப்பாக்கியை ஏந்தியபடி மாணவியரை அழைத்துச் செல்கிறேன். இதைவைத்து சுட்டால் நாய்களின் உயிருக்கு பாதிப்பு இல்லை. அதனால் என் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது,''என்றார்.
Post a Comment (0)
Previous Post Next Post