அரசுப் பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்புப் பணிகள்: அன்புமணி வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்புப் பணிகள்: அன்புமணி வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் மழைக் கால பாதுகாப்புப் பணிகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

வடகிழக்குப் பருவமழை சனிக்கிழமை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், அரசுப் பள்ளிகளில் மழைக்கால விபத்துகள், பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், அதற்கான நிதி வழங்கப்படவில்லை. மழைக்கால பாதுகாப்புப் பணிகள், பிற பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்படி ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வழங்கப்பட வேண்டிய இந்த நிதி, நடப்பாண்டில் இதுவரை வழங்கப்படவில்லை.

மாணவச் செல்வங்களின் பாதுகாப்பு சாா்ந்த விஷயங்களில் பள்ளிக்கல்வித்துறை அலட்சியம் காட்டக் கூடாது. தேவையான நிதியை பள்ளிக் கல்வித்துறை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
Post a Comment (0)
Previous Post Next Post