புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை பல்கலைக்கழக நுழைவு தேர்வு மூலம் வழக்கம்போல நடத்தப்படுமா அல்லது கியூட் தேர்வு மூலம் நடத்தப்படுமா என்பதை பல்கலைக்கழக நிர்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பு, முதுநிலை, பி.எச்.டி., என மொத்தம் 115க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. அனைத்து படிப்புகளுக்கும் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகமே தனியாக நுழைவு தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது.
இந்தாண்டு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள 10 ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்பு களுக்கு மட்டும், மத்திய பல்கலைக்கழகங்களுக் கான கியூட் நுழைவு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகி றது. வரும் 22ம் தேதிக்குள் https://cuet.samarth.ac.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 105 படிப்பு களுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் நுழைவு தேர்வு விரைவில் நடத்தும்; இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்து மாணவ மாணவிகள் நுழைவு தேர்விற்கு தயாராகி வருகின்றனர். இதற்கான பணிகளை முடுக்கிவிட்டு இருந்த பல்கலைக்கழகம் தற்போது மவுனம் காத்து வருகிறது.
இதன் காரணமாக, முதுநிலை படிப்புகளுக்கு நுழைவு தேர்வை புதுச்சேரி பல்கலைக்கழகம் நடத்துமா அல்லது கியூட் தேர்வு நடத்தப்பட்டு சேர்க்கை மேற்கொள்ளப்படுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.அடுத்தவாரம், 43 மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள முதுநிலை படிப்புகளுக்கான கியூட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இதில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை படிப்புகளும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பல்கலைக்கழகத்தில் 105 முதுநிலை படிப்புகளுக்கு சேர்க்கை எப்படி நடத்தப்படும் என்பதை மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழக நிர்வாகம் முன்கூட்டியே தெளிவுப்படுத்த வேண்டும். இட ஒதுக்கீடு
புதுச்சேரி கல்லுாரிகளில் இல்லாத படிப்புகளில் 25 சதவீத இடங்களை உள்ளூர் மாணவர்களுக்கு வழங்க ஒப்புக் கொண்டு, 1997ம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த இட ஒதுக்கீடு 22 பாடப்பிரிவுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், 10 ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் கியூட் தேர்வுக்கு சென்று விட்டது. இதில், 3 பாட பிரிவுகளில் புதுச்சேரி மாணவர் களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. கியூட் தேர்வுக்கு சென்றதால், 3 படிப்புகளில் இட ஒதுக்கீடு பறிபோய்விட்டது.
இந்த சூழ்நிலையில், பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை படிப்புகள் கியூட் தேர்வு மூலமாக நிரப்பப்படும் பட்சத்தில், புதுச்சேரி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடருமா என்பதையும் பல்கலைக்கழகம் நிர்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும்.