நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை தயாரிப்பு பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் முடித்துள்ளது.தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
இதில், ஊரக உள்ளாட்சி பதவிகள், 2019 டிச., மற்றும் சமீபத்தில் நடந்த தேர்தல்கள் வாயிலாக நிரப்பப்பட்டு விட்டன.மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டிஉள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், வார்டு மறுவரையறை செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்த தேர்தலை மூன்று கட்டங்களாக நடத்தி, 2022 ஜனவரியில் புதிய நிர்வாகிகளை பொறுப்பேற்க வைக்க, ஆணையம் திட்டம் வகுத்துள்ளது.இது ஒருபுறம் இருக்க, எந்தெந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு, எந்த கட்டத்தில் தேர்தல் நடத்தலாம் என்பது குறித்த அட்டவணை தயாரிப்பு பணிகள் நடந்து வந்தன.தேர்தல் பணியில் போலீசார் மற்றும் அலுவலர்களை சிரமமின்றி ஈடுபடுத்தும் வகையில், அட்டவணைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
தற்போது, தேர்தல் அட்டவணை தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளன.இட ஒதுக்கீடு அடிப்படையில், வார்டு வரையறை பணிகள் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியான தி.மு.க.,வும், பயிர் நிவாரணம், பொங்கல் பரிசு என அறிவித்து, தேர்தலுக்கு தயாராகி விட்டது. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெறவும் ஏற்பாடு நடக்கிறது.எனவே, இம்மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என, ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது. கலெக்டர்களுடன் ஆலோசனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுடனான ஆலோசனை கூட்டம், நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் கூட்டம் நடந்தது. மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சுமுகமாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,'' என, கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரித்தல்; தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் காலியிடங்களை நிரப்புதல்; ஓட்டுப்பதிவு அலுவலர்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மண்டல அலுவலர்களை நியமித்தல்; ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, பெல் நிறுவன பொறியாளர்களை வைத்து சோதனை செய்தல்; தேர்தலுக்கான பொருட்களை இருப்பு வைத்தல்; ஓட்டு எண்ணும் மையங்களை இறுதி செய்தல் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மாநில தேர்தல் ஆணைய செயலர் சுந்தரவல்லி, கூடுதல் டி.ஜி.பி., வெங்கட்ராமன், பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.