கனமழை காரணமாக நாளை (நவ.,19) சென்னை, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று (நவ.,18) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ.,19) காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்கக்கூடும். இதனையடுத்து நாளை டெல்டா மற்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். மேலும், மாணவர்களை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது என பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினர்.