ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளன்று விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Tuesday, October 5, 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளன்று விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளன்று விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காஞ்சிபுரம், அக்.4 :காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லிங்கேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9 ம் தேதி நடைபெற உள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தொழில் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், பீடி சுருட்டு நிறுவனங்கள் பொது தனியார்துறை உள்ள அனைத்து நிறுவனங்களில் தற்காலிக, ஒப்பந்த தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கவேண்டும். அன்றைய தினம் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார்கள் பெற தொழிலாளர் துறை, தொழிலாளர் ஆணையரால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேர்தல் நாளான 6 மற்றும் 9 ம் தேதி ஆகிய 2 நாட்களிலும் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள் ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நாளன்று விடு முறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) லிங்கேஸ்வரன் (9778619552), தொழிலாளர் துணை ஆய்வர் கமலா (9952639441), தொழிலாளர் உதவி ஆய்வர் மாலா (9790566759), பரங்கிமலை தொழிலாளர் உதவி ஆய்வர் சிவசங்கரன் (9444152829), காஞ்சிபு ரம் முத்திரை ஆய்வர் வெங்கடாச்சலம் (9444062023) ஆகிய செல்போன் எண்களிலும் 044-27237010 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக் கலாம். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில், பரங்கிமலை தொழிலாளர் துணை ஆய்வர் மனோஜ் ஷியாம் சங் கர் (8667570609), செங்கல்பட்டு தொழிலாளர் உதவி ஆய்வர் பிரபாகரன் (9944214854) மதுராந்தகம் தொழி லாளர் உதவி ஆய்வர் பொன்னிவளவன் (9789253419). தாம்பரம் தொழிலாளர் உதவி ஆய்வர் வெங்கடேசன் (8870599105), செங்கல்பட்டு முத்திரை ஆய்வர் சிவ ராஜ் (7904593421), பரங்கிமலை முத்திரை ஆய்வர் வேதநாயகி (9884264814) ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot