வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றும், நாளையும் 2ம் கட்ட சிறப்பு முகாம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2022 நடைபெறுவதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள் 27ம் தேதி சனிக்கிழமை மற்றும் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் மண்டலங்கள் 4, 5, 6, 8, 9, 10 மற்றும் 13க்குட்பட்ட சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளன.

எனவே, பொதுமக்கள் ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (1.1.2004ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்கலாம். மேலும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் விவரங்களை திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய மற்றும் பெயர்களை நீக்கம் செய்ய இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நவ., 1ல் துவக்கப்பட்டது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

வாக்காளர்கள் வசதிக்காக, 13, 14, 20, 21ம் தேதிகள் என நான்கு நாட்கள், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இம்முகாம்களில் மொத்தம், 8.59 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன. பெயர் சேர்க்க மட்டும், 61.41 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடைசியாக இன்றும்( நவ.,27), நாளையும், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பங்கள் வழங்கலாம்.இது தவிர, www.nvsp.in என்ற இணையதளத்திலும், VOTER HELPLINE என்ற மொபைல் ஆப் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment (0)
Previous Post Next Post