நடுநிலைப்பள்ளிகளில் கணினி, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கிட வலியுறுத்தல்

நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்க ளின் எண்ணிக்கையை அதி கரிக்ககணினி, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கிட ஈரோட்டில் நடந்த தமிழ்நாடு பட்ட தாரி ஆசிரியர் கூட்டமைப் பினர் வலியுறுத்தி, தீர்மா னம் நிறைவேற்றியுள்ளனர்.

ஈரோட்டில் தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழுகூட்டம்நடந் தது.கூட்டத்திற்கு,கோவை மாவட்ட செயலாளர்மணி கண்டன் தலைமைதாங்கி னார். முன்னாள் மாநில தலைவர் ஆனந்த கணேஷ், மாநில பொருளாளர் தங்க வேலு, இணை செயலாளர் ஷசீனா பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்து, பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கி யதை போன்றே நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப் படிஉயர்வைமாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவர் களின் நலனை கருத்தில் கொண்டு அதிகளவில் கொரோனா குறித்த விழிப் புணர்வும், உளவியல் ரீதி யான பாதிப்புகளைகளைய நடவடிக்கை எடுக்க வேண் டும். அனைத்து நடுநிலை பள்ளிகளிலும் அலுவலக பணியாளர், கணினி ஆசி ரியர், உடற்கல்வி ஆசிரியர், அலுவலக உதவியாளர், தூய்மைபணியாளர் ஆகிய பணியிடங்களை உருவாக்கி நியமிக்கப்பட வேண்டும். காலிப் பணியிடங்கள் மற் றும்கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஒவ்வொரு நடுநிலை பள்ளியி லும் மாணவர்களின் எண் ணிக்கையை அதிகரிக்க கணிதஆசிரியர், அறிவியல் ஆசிரியர்,ஆங்கில ஆசிரியர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக் கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.இதில், மாவட்ட தலைவராகவீராகார்த்திக், மாவட்ட செயலாளராக நளினி, மாவட்ட பொரு ளாளராக சிவராமன், மாநில செயற்குழு உறுப் பினராக அருள் மற்றும் மாவட்டதுணை தலைவர்க ளாகதனகுமார், ஹாகிதா. இணை செயலாளர்களாக பாலகிருஷ்ணன், இந்துமதி, மாநில பொதுக்குழு உறுப் பினர்களாக பூபதி, சதீஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Post a Comment (0)
Previous Post Next Post