உதவி பேராசிரியர் பணி - நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 29.11.2021

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு எம்.பில், எம்.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : காந்திகிராம ஊரக நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

பணி : Assistant Professor

தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Aricultural Engineering, Farm Machinery பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம், M.Phil, M.Tech, Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 2 முதல் 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ruraluniv.ac.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 29.11.2021 நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம் : காலை 10.30 மணியளவில் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Board Room, Administrative Block.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ruraluniv.ac.in/ அல்லது https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/walk_in171121.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.
Post a Comment (0)
Previous Post Next Post