கோவையில் தனியார் பள்ளி மாணவர் ஆசிரியரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவனை இறுக்கமாக ஆடை அணிந்து வந்ததாகக் கூறி இயற்பியல் ஆசிரியர் அடித்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் அந்த மாணவனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக மாணவனின் பெற்றோரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் கோவையில் தனியார் பள்ளி மாணவர் ஆசிரியரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவையில் தனியார் பள்ளி மாணவர் ஆசிரியரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் நலன் பேணவும், ஆசிரியர் மாணவர் நல்லுறவு பேணவும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment