Post Top Ad
Your Ad Spot
Friday, March 25, 2022
17 வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த 26 வயது ஆசிரியை போக்சோவில் கைது
துறையூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியையும், அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் துறையூரை சேர்ந்த மாணவனும் கடந்த 5 ஆம் தேதி, திடீரென மாயமாகினர். இது குறித்து, மாணவனின் பெற்றோர் துறையூர் போலீசில் மகனை காணவில்லை எனவும், ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் அளித்தனர். பின்னர், போலீசாரின் தீவிர விசாரணையில் ஆசிரியை சர்மிளா, திருச்சி எடமலைப்பட்டி புதூரில், தனது தோழியின் வீட்டில் தங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஆசிரியை கைது செய்த
போலீசார், மாணவரை மீட்டனர். விசாரணையில், ஆசிரியை திருவாரூரில் மாணவருடன் சுற்றித்திரிந்ததும், பின்னர், தஞ்சை பெரிய கோயிலில் ரகசிய திருமணம் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சர்மிளாவை போக்சோவில் கைது செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.


No comments:
Post a Comment