மத்திய அரசு போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்: பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

Patrick Raymond, the state general secretary of the Graduate Teachers' Federation, has demanded that Tamil Nadu government employees be given the same increase as teachers in central government employees.


He said: From January 1, 2022, the central government employees will be given 34 per cent increase in the internal rate by 3 per cent. In Tamil Nadu, government employees have not been given an increase in their pay for 5 months.


Therefore, without delay, the first invoice should be paid in arrears from January 2022. The Government of Tamil Nadu has suspended the payment of leave handover earned for corona relief work till March 2022. It has now announced that it will be suspended pending a re-order.


With the GST till May, the outstanding amount has been paid by the Central Government and the Government should issue a notice to hand over the leave earned to the employees of the Government of Tamil Nadu. The new medical insurance plan pays an installment of Rs.300 per month. Insurers only reimburse less than 50 percent of the treatment paid in private hospitals.


The insurance plan does not allow corona treatment in many hospitals. Applications in this regard have been sent to the offices of the Treasury and the Collector. So far no payments have been made to government employees.Government employees are required to reimburse treatment fees. The government should ensure free treatment under the new insurance scheme, 'he said. தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு

'மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நிறுத்திய அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்'' என பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.


அவர் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜன., 1 முதல் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி 34 சதவீதம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 5 மாதங்களாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை.கொரோனா காலத்தில் 16 மாத அகவிலைப்படியை விட்டு கொடுத்துள்ளனர்.


எனவே தாமதம் இன்றி 2022 ஜன., முதல் அகவிலைப்படியை நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும்.தமிழக அரசு கொரோனா நிவாரண பணிகளுக்காக ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் பெறும் முறையை மார்ச் 2022 வரை நிறுத்தி வைத்தது. தற்போது மறுஉத்தரவு வரும்வரை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

மே வரையிலான ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஒப்படைக்க அரசாணை வெளியிட வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டுதிட்டத்தில் மாதம் ரூ.300 வீதம் தவணை செலுத்தப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் செலுத்திய சிகிச்சை கட்டணத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவான அளவு மட்டுமே காப்பீட்டு நிறுவனங்கள் திருப்பி அளிக்கின்றன.


கொரோனா சிகிச்சைக்கு பல மருத்துமனைகளில் காப்பீட்டு திட்டம் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து விண்ணப்பங்கள் கருவூலத்துறை, கலெக்டர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதுவரை அரசு ஊழியர்களுக்கு எந்த தொகையும் வழங்கவில்லை.அரசு ஊழியர்கள் சிகிச்சை கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும். புதிய காப்பீட்டு திட்டத்தில் கட்டணமில்லாத சிகிச்சையை அரசு உறுதி செய்ய வேண்டும்,' என்றார்.
Post a Comment (0)
Previous Post Next Post